அல்வா மாதிரி 6 லட்சம் மானியம் ! அக்ரி பட்டதாரிகளுக்கு அரசின் சூப்பர் திட்டம்

சென்னை: வேளாண் துறையில் படித்த இளைஞர்களுக்கு தொழில் ஆரம்பிக்க தமிழக அரசு பெரும் வாய்ப்பு வழங்கியுள்ளது. ‘முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 1,000 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்களிடையே இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 1,768 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 973 பேரின் திட்ட அறிக்கைகள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, 413 இளைஞர்கள் ஏற்கனவே வங்கிக் கடன் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சித்தலைவர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 248 இளைஞர்களுக்கு மாவட்ட அளவில் அனுமதி, 237 பேருக்கு மாநில அளவில் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். 300 – 600 சதுர அடி பரப்பளவில் இந்த சேவை மையங்களை அமைக்க 10–20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரசு 30% மானியம், அதாவது 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இரண்டு தவணைகளில் வழங்கும்.

இந்த மையங்களில் விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள், பூச்சி–நோய் மேலாண்மை வழிகாட்டுதல், சிறிய வேளாண் இயந்திரங்களின் வாடகை, டிரோன் தெளிப்பு சேவை உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்பட உள்ளன.

20 முதல் 45 வயதுக்குள் வேளாண் பட்டம்/பட்டயம் முடித்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வங்கிக் கடன் ஒப்புதல் பெற்ற பிறகு, ஆர்வமுள்ளவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கீழே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: tnagrisnet.tn.gov.in/KaviaDP/register

Exit mobile version