தர்மபுரி : தர்மபுரி அருகே அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் மோதியதில், 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
உழவன் கொட்டாய் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்த விபத்தில், வீட்டில் இருந்த ஹர்த்திகா என்ற சிறுமி மற்றும் பஸ் ஓட்டுநர் காயமடைந்தனர். இரண்டு பேரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனாலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி ஹர்த்திகாவின் உயிர் காப்பாற்ற முடியவில்லை.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.