மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு அனுமதிக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும் இந்த தொழில் பயிற்சி நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செம்பனார்கோவில் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொழிற் பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை அவர் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலாவது தொழில் பயிற்சி நிலையமாக தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில், Operator advantage machine tools, Mechanic agriculture machinery, Electrician power distribution, Welder ஆகிய நான்கு பிரிவுகளில் உள்ள நூறு இடங்களில், மாணவ மாணவிகள் 83 பேர் நிகழாண்டுக்கு இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















