May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோபிசெட்டிபாளையத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்: அமைச்சர் முத்துசாமியிடம் வர்த்தக சங்கம் அதிரடி மனு!

by sowmiarajan
February 1, 2026
in News
A A
0
கோபிசெட்டிபாளையத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்: அமைச்சர் முத்துசாமியிடம் வர்த்தக சங்கம் அதிரடி மனு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ், ‘இலக்கு 2030’ உத்திகள் மற்றும் தொலைநோக்குச் செயல் திட்டங்கள் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான முக்கியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில், கோபிசெட்டிபாளையம் ஆல் ட்ரேடர்ஸ் அசோசியேஷன் (All Traders Association) தலைவர் ஜி.எஸ்.வேலுமணி கலந்துகொண்டு, தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோரிடம் கோபி நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை வழங்கினார்.

அந்த மனுவில், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையை உடனடியாகப் பல்நோக்கு மருத்துவமனையாக (Multi-specialty Hospital) தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், அஞ்சியோ மற்றும் டயாலிசிஸ் போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்தி, நரம்பியல் மற்றும் இருதயத் துறைக்கான சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், யோகா மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகர்களின் நலன் சார்ந்து, நல வாரியங்களைச் சீரமைப்பதுடன், அரசுத் திட்டங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், வர்த்தக உரிமம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ (MSME) துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அதிகாரிகள் வணிகப் பிரதிநிதிகளை அழைத்து அடிக்கடி கருத்தரங்குகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

நகரின் அடிப்படை வசதிகள் குறித்துப் பேசுகையில், கோபி நகராட்சியில் தற்போது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும் குடிநீரை, தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீர் வீணாவதைத் தடுக்க வீடுகளில் ‘ப்ளோட்’ (Float) பொருத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா, பல்நோக்கு வணிக வளாகம், நகரின் மத்தியில் தீயணைப்பு நிலையம் மற்றும் பிரம்மாண்ட விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தப்படும் 6 சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியை மாநகராட்சியாக (Corporation) தரம் உயர்த்த வேண்டும் என்றும் பலமான கோரிக்கை வைக்கப்பட்டது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தக் கொடிவேரி அணையைப் நவீனப்படுத்த வேண்டும் மற்றும் கோபியிலிருந்து நேரடிப் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கோபிசெட்டிபாளையம் ஆல் ட்ரேடர்ஸ் அசோசியேஷன் உறுப்பினரும் குப்தா ஜூவல்லரி உரிமையாளருமான மணிவண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கோபி நகரின் வளர்ச்சிக்கான இந்த ஆக்கப்பூர்வமான கோரிக்கைகள் ‘இலக்கு 2030’ திட்டத்தில் சேர்க்கப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Tags: Gopichettipalayamminister muthusamyMunicipal CorporationPetitionTraders Association
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்குரிமை.. மாற்றத்தை உருவாக்கும் சக்தி இளைஞர்களிடமே உள்ளது

Next Post

தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி: ஓடத்துறையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் உருவான பிரம்மாண்ட கல்விக்கோவில்

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி: ஓடத்துறையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் உருவான பிரம்மாண்ட கல்விக்கோவில்

தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி: ஓடத்துறையில் 'நமக்கு நாமே' திட்டத்தில் உருவான பிரம்மாண்ட கல்விக்கோவில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.