சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்து, ரூ.82 ஆயிரம் மார்க்கை நெருங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த தங்க விலை, இன்று ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.10,240 என்றும், ஒரு சவரன் ரூ.81,200 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, ரூ.82 ஆயிரத்தை எட்டும் நிலையில் உள்ளது.
இதனுடன், வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து, தற்போது ரூ.142க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டுவருவதால், ஆபரணங்கள் வாங்க திட்டமிட்டுள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
















