மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச அரங்க தலங்களில் ஐந்தாவது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது தலமுமான இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ஆம் திருவிழாவான இன்று பெருமாள் கருட சேவை நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பரிமள ரெங்கநாதர் கோயில் ஏகாதசி மண்டபத்தில் கருடவாகனத்திலும் ஆண்டாள் அன்னபற்றி வாகனத்திலும், சேனை முதல்வரும் எழுந்தருளச் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கருட சேவையில் பெருமாள் அண்ணன் பத்தி வாகனத்தில் ஆண்டாள் சேனை முதல்வர் சகோதர தரிசனம் என்று அழைக்கப்படும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். தொடர்ந்து மகாதீபராதனை செய்யப்பட்டு சகோதர தரிசன காட்சி வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முன்பு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.


















