ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தவிமல் உட்பட 4 நபர்கள் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை பெற்று தந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தந்திட, 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வை

உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்திட, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 30.10.2019 அன்று D-2 அண்ணா சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த
விமல் உட்பட 4 நபர்கள் கைது செய்து 6 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்று போதைப்பொருள் வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தொடர்ச்சியாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காரணத்தினால் எதிரி விமல் மீது கடந்த 18.07.2025 அன்று பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

D-2 அண்ணா சாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, நீதிமன்ற பிடியாணை
பிறப்பிக்கப்பட்ட எதிரி விமல் என்பவரை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி விமல் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version