சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தர்காஸ் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்.26. மீனவர். மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இருந்தபடி கஞ்சா வியாபாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை அடுத்து புதுப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று தினேஷை பிடித்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போது கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தினேஷ் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.25,000 என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் கைது செய்யப்பட்ட தினேஷை சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version