திருவாரூர் அருகே இலவச இருதயம் மற்றும் சிறப்பு பொது மருத்துவ முகாம்

திருவாரூர் அருகே இலவச இருதயம் மற்றும் சிறப்பு பொது மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லுமாங்குடி தனியார் அரங்கில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் சூர்யா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் குடவாசல் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் இலவசமாக இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
இந்த முகாமில் சிபிஎம் கட்சி முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version