திருவாரூர் அருகே தமிழக முதல்வரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி என்பவரது உணவகத்தில் நாள் முழுவதும் இலவச உணவு

திருவாரூர் அருகே தமிழக முதல்வரின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கார்த்தி என்பவரது உணவகத்தில் நாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தொடங்கி வைத்தார்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் உள்ள கார்த்தி என்பவரது உணவகத்தில் நாள் முழுவதும் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திருவாரூர் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தொடங்கி வைத்தார். முன்னதாக புலிவலம் திமுக அலுவலகத்தில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முதல்வரின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version