கன்னியாகுமரி மாவட்டம்: மீண்டும் பள்ளிக்கு போகலாம் என 20 வருடங்களுக்கு முன்பு உள்ள நினைவுகளோடு வகுப்பறைக்கு வந்த முன்னாள் மாணவர்கள் – 20 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் சந்தித்த நண்பர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் அமைந்திருக்கும் புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 20 வருடங்களுக்குப் பிறகு ஒன்றினையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் பள்ளியின் தற்போதைய தாளாளர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை வழங்கியும் நினைவு கேடம் வழங்கியும் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் நினைவுகூர்ந்தல் நிகழ்ச்சி சுவாரசியமாக நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பழைய விஷயங்களை நினைவு கூறும் விதமாக மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்று வருகை பதிவேடு எடுத்து அதில் ஆசிரியர் மாணவர்கள் உற்சாகமாக பங்கு பெற்றனர் 20 வருடத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்றது போன்ற அனுபவத்தை உற்சாகமாக மகிழ்ந்து குடும்பத்துடன் கொண்டாடினர். முன்னாள் மாணவர்கள் ஒன்றிணையும் விழாவிற்காக பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளில் வசித்து வந்த நிலையில் இந்த விழாவிற்காக இன்று அனைவரும் ஒன்றிணைந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
