பசுமை தமிழ்நாடு இயக்கத்தினத்தை முன்னிட்டு விழுப்புரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நடவுசெய்தார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னாள் எம்பி கௌதசிகாமணி மற்றும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவுசெய்தனர்.
தமிழ்நாட்டில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் பசுமையாக்க வேண்டும் என்பது தமிழக முதலமைச்சரின் நோக்கம். எனவே அனைவரும் கல்லூரி ,ரோடுகளில் மட்டும் மரம் வளர்பது இல்லாமல் அனைவரின் வீடுகளிலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என கூறி மாணவ மாணவிகளுக்கு பனம்பழம் விதைகளை வழங்கி வீடுகளில் நாட்டு பராமரிக்கும்படி அறிவுறுத்தினார்
