அண்ணாமலை,சீமான் ஆகியோர்களை தொடர்ந்து செய்தியாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய முன்னாள் ஐ ஜி பொன்.மாணிக்கவேல் – உங்கள் சொந்த ஊரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க முடியாத நீங்கள் ஒரு முதல்வரா எனக் காட்டமாக கேள்வி..
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வருகை தந்த முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது…
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கோயில் மரகதலிங்க மூலவர் திருமேனி களவாடப்பட்டு 33 வருடங்களாகிறது. தமிழ்நாடு காவல்துறையால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 2009ம் வருடம் மாயமான மரகத லிங்க திருமேனியை கண்டு பிடித்து விட்டதாக பொய்யாக ஆவணங்கள் தயாரித்து சிலை திருட்டு தடுப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒரு மரகத லிங்கத்தை வலுகட்டயமாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.
தங்கள் கோயில் சிலை இதுவல்ல என மறுப்பு தெரிவித்த காவலாளியை, ஆய்வாளர்கள் துன்புறுத்தி போலி சிலையை உண்மையான சிலையென ஒத்துக்கொள்ள வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோயில் காவலாளி கோவிந்தன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்தக் கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகரும் மனவேதனையில் இறந்து விட்டார்.
சிலை திருட்டு தடுப்பு இன்ஸ்பெக்டரால் வழங்கப்பட்ட போலி சிலை திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயிலில் 15 வருடமாக இருந்தது. பின்னர் குற்றச்சாட்டு அடிப்படையில், மரகத லிங்கம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி டிஎஸ்பி மரகதலிங்கம் போலி என கண்டுபிடித்தார். இதையடுத்து 2023ல் திருக்காரவாசல் கோயிலுக்கு வழங்கப்பட்ட மரகத லிங்கம் திருடப்பட்டதல்ல என விழுப்புரம் கோர்ட்டிலும் தீர்பளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரிஜினல் மரகத லிங்கம் என்னவானது, யார் திருடியது, இந்த லிங்கம் எங்குள்ளது, இந்த போலி சிலை கொடுத்து பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மீது எதனால் நடவடிக்கை எடுக்கபடவில்லை என்கிற கேள்விகளுக்கு அரசிடமிருந்து பதில் கிடையாது.
இந்த அரசாங்கம், அந்த அரசாங்கம் என்று இல்லாமல் எந்த அரசாங்கத்திலும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. உண்மையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் சிலை தடுப்பு சிபிசிஐடியை மூட வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சம்பளம் வாங்காமல் நான் வேலையை பார்த்து தருகிறேன். ஆறு மாதம் மட்டும் கொடுங்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தருவேன்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்ற போது உங்கள் தொலைக்காட்சி ஆன்மீகத்துக்கு எதிரானது. அதனால் உங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார். மேலும் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி பற்றிய தவறான தனது எண்ணங்களை வெளிப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எப்போ பார்த்தாலும், காலில் சுட்டேன், காலில் சுட்டேன் என்று தகவல் வருகிறது. எப்போது பார்த்தாலும் காலிலேயே தான் திமுக போலீஸ் சுடுகிறது. காலிலேயே சுட்டு படிப்பது மக்களை ஏமாற்றம் செயல்.
அரசு அதிகாரிகள் தான் நம்பர் ஒன் குற்றவாளி. இரண்டாவது தான் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகள் நேரடியாக செய்ய மாட்டார்கள். மறைமுகமாக செய்வார்கள். அரசியல்வாதிகளை நேரடியாக தூக்கி எறிந்து விடலாம். ஆனால் அதிகாரிகளை தூக்கி எறிய முடியாது.
சிபிசிஐடி யும் உண்மையான மரகத லிங்கத்தை கண்டுபிடிக்கும் திறனை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. எனவே, தற்போதைய டிஜிபி யாவது இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு உண்மையான சிலையை கண்டுபிடித்து கோயிலுக்கு வழங்க வேண்டும்.
கோயில் மெய்க்காப்பாளர் கோவிந்தன் தற்கொலைக்கு காரணமான சிலை திருட்டு தடுப்பு இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிந்தன் மற்றும் அர்ச்சகர் குடும்பத்திற்கு அரசு தலா ரூ. 10 லட்சம் வழங்கிட வேண்டும்.
திருக்குவளை யாருடைய ஊரு..? முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊர். அவரோட சொந்த ஊரிலேயே நடைபெற்ற திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் தந்தை ஊரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தைக் கூட கண்டுபிடிக்க உங்களுக்கு யோக்கியது இல்லை. நீங்களா முதலமைச்சர்.? இல்லை. நீங்கள் முதலமைச்சர் இல்லை.
நேரடியாக அரசாங்கத்தை குறை கூறுவது மிகப்பெரிய தவறு. அதிகாரிகள் முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்றார்
பேட்டி : முன்னாள் ஐ ஜி பொன்மாணிக்கவேல்
















