வெளிநாட்டு பயணத்தால் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாஷிங்டன்: ஜெர்மனி மற்றும் பிரிட்டன் பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:

“லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகன சூழலில் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வெறும் எண்ணிக்கைகளல்ல, அவை நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகளை குறிக்கின்றன. இது ஆட்சியில் உள்ள திமுகவிற்கு பெரும் ஊக்கமாகும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version