சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

இளையவேந்தர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திருமதி. சரளா அவர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். நேற்று இரவு சுமார் 300 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி மனிதநேயத்தின் உச்சமாக சமூக சேவையை சிறப்பாக மேற்கொண்டார். நகரத்தின் முக்கிய போக்குவரத்து மையமான கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் இந்த அன்னதானத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். உணவு பெற்ற பொதுமக்கள், “இதுபோன்ற சேவைகள் சமூகத்திற்கு மிகவும் தேவை. உங்கள் சேவை தொடரட்டும்… வாழ்த்துக்கள்” என்று கூறி, திருமதி சரளா அவர்களையும், அவருடன் இணைந்து சேவையாற்றிய குழு உறுப்பினர்களையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து பாராட்டினர். இந்த மனிதநேய சேவை நிகழ்வில், இளையவேந்தர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திருமதி. புஷ்பராணி, மாநில மகளிர் அமைப்பு செயலாளர் திருமதி. ஷோபா, மாநில அமைப்பு செயலாளர் திரு. லட்சபதி என்கிற லட்சியவேந்தன் மற்றும் பேரவையின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும்
உடனிருந்து நிகழ்வை சிறப்பித்தனர்.இந்த நிகழ்வின் போது பேசிய பேரவை நிர்வாகிகள், ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை, அடிப்படை தேவைகள் வழங்குவது இளையவேந்தர் பேரவையின் முக்கிய சமூக இலக்காக தொடரும் என்றும், இத்தகைய மனிதநேய சேவைகள் சென்னை மட்டுமின்றி மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தனர். சமூக நலன், மனிதாபிமானம், மக்கள் சேவையே அரசியல் என்ற உயரிய நோக்குடன் இளையவேந்தர் பேரவை செயல்பட்டு வருகிறது என்பதை இந்த அன்னதான நிகழ்வு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது.

Exit mobile version