• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து -1மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்

by Satheesa
November 21, 2025
in News
0
சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து -1மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து – ஒரு மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்…

திருவாரூர் நகரின் மையப் பகுதியான தெற்கு வீதி பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் பிரபல தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் வங்கி ஒன்றும், இரண்டாம் தளத்தில் நிதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பியூட்டி பார்லரை திறந்த பெண் ஊழியர்கள் அங்கிருந்த மின் சாதனங்களை இயக்கிய போது, திடீரென மின் கசிவு ஏற்பட்டு பியூட்டி பார்லர் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அலறி அடித்துக் கொண்டு பெண் ஊழியர்கள் வெளியேறினர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் பியூட்டி பார்லர் தளம் முழுவதும் புகை பரவி மேல் தளத்திற்கு சென்றது. தொடர்ந்து புகை அதிகமாகி திருவாரூர் நகரம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அழகு சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இன்று காலை சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மாலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திருவாரூரில் உள்ள அழகு சாதன நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district newsfire accidentFire and Rescue Services StationFIRE SERVICEtamilnaduthiruvarurThiruvarur Districtthiruvarur fireaccident
Previous Post

திருவாரூர் புறவழி பிரதான சாலையில் பள்ளம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. பொதுமக்கள் அவதி

Next Post

“மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி செய்கிறது” : வைகோ கடும் குற்றச்சாட்டு

Related Posts

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஐப்பசிமாத துலாஉற்சவம் & கந்தசஷ்டி திருவிழா தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க BJP கடிதம்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வரைவு வாக்காளர் பட்டியலை ஷேக்அப்துல்ரகுமான் வெளியிட்டார்

November 12, 2026
Next Post
“மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி செய்கிறது” : வைகோ கடும் குற்றச்சாட்டு

“மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி செய்கிறது” : வைகோ கடும் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஐப்பசிமாத துலாஉற்சவம் & கந்தசஷ்டி திருவிழா தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க BJP கடிதம்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

by Satheesa
November 12, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6