மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்ப அங்காடி முன்பு நகர அதிமுகவினர் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய அதிமுகவின் மலர்தூவி மரியாதை செய்தனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் கோமல் அன்பரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம்.ஆர்.எஸ் சங்கர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version