வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல். இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது, மேலும் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பத்து நாட்களாக மழை பெய்து வருவதால். செங்கல்பட்டு வள்ளிபுரம் ஈசூர் பாலாற்றில் லேசான வெள்ள நீர் அதிகரித்துள்ளது
இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக நீர் நிலங்கள் நிரம்பி காட்சியளிக்கிறது.
மேலும் மாவட்டத்தில் சில ஏரிகள் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன பல கிராமங்களில் மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது இதுவரை இல்லாத வகையில் முன்கூட்டியே மழை மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

 
			















