திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

திருவாரூர் அருகே கெயில் இந்தியா மற்றும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் கெயில் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேஸ் கொண்டு செல்லப்படும் குழாயில் தீ விபத்து ஏற்பட்டால் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையில் ஒருவரை காப்பாற்றுவது எப்படி என பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று அதானி கேஸ் நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனம் இணைந்து நடத்தியது.

அப்போது ஒருவர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை பாதுகாப்பாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும் உடனடியாக பைப் லைன் உடைப்பை சரி செய்து தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் சோதனையும் நடத்தினர் .

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version