பிரபல டைலரிங் கடையில் தீ விபத்து. இரண்டு லட்சம் மதிப்பிலான துணிமணிகள் தையல் மெஷின்கள் எரிந்து சேதம். பூம்புகார் MLA நிவேதா முருகன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்
மயிலாடுதுறை மகாதான தெருவில் பிரபல டைலரிங் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. துரை என்பவருக்கு சொந்தமான இந்த கடையில் கடந்த 14ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இந்த கடையில் தைப்பதற்கு கொடுக்கப்பட்ட துணிகள் தையல் மிஷின்கள் உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதம் அடைந்தது.
இந்நிலையில் சேதம் அடைந்த டைலரிங் கடையை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், நகர் மன்ற தலைவர் செல்வராஜ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.


















