தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வாரம் ஒரு முறை தற்போதைய வகுப்புகள் நடத்தப்பட திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை இயக்க PDசெல்வகுமார்

கன்னியாகுமரி மாவட்டம்: பள்ளி மாணவ மாணவியர்கள் தவறான பாதைக்கு செல்லாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வாரம் ஒரு முறை தற்போதைய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் தெரிவித்தார்.
திரைப்படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் குமரி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கட்டிடங்கள் தனது சொந்த நிதியிலிருந்து கட்டிக் கொடுப்பதும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி பயில நிதி அளிப்பது ஆதரவற்றோர் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு திருமண நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் அண்மையில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவியர் முதல் இரண்டு இடங்களை பிடித்த சுமார் 500 பேருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் விழாவினை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்

நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் இரண்டு இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை வழங்கும் விழா கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பிடி செல்வ குமார் கூறும் போது தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி முதல்வருக்கு பள்ளி மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாத வகையில் பள்ளிகளில் வாரம் ஒரு முறை நற்போதனை வகுப்பு நடத்த வேண்டும் என முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளேன். புதிதாக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஆரம்பமே விமர்சனத்தை தவிர்க்கிறேன் தற்போதைய ஆட்சியில் ஆரோக்கியமாக நடைபெறும் என நம்பிக்கை உள்ளது , நல்ல பல அதிகாரிகளை நியமித்து உள்ளார் .மேலும் கடந்த காலங்களில் முதல்வர் விஜய்க்கு சேர்க்கை சரியில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தேன் தற்போது தமிழக முதல்வருக்கு சேர்க்கை சரி இலலை இருப்பினும் தமிழக முதல்வர் விஜய் அதை சரியாக வழி நடத்துவார். தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என நம்பிக்கை உள்ளது. என தெரிவித்தார்.

Exit mobile version