திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குன்றம் கிராமத்தில் தெலுங்கு பேசும் 80 பட்டியலின குடும்பத்தினர் அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் பட்டியிலின மக்கள் பயன்படுத்து வந்த சாலை அதன் உள்ளடக்கிய வீடுகள் அவர் நிலத்திற்கு உள்ளடக்கி இருப்பதால் அந்த நிலத்தை அரசு அளவீடு செய்து அளிக்குமாறு நீதிமன்றம் ஆணை பெற்று வந்துள்ளார். நீதிமன்ற ஆணை பிறகு வருவாய்த் துறையினரும் அப்பகுதிக்குச் சென்று அந்த மக்கள் பயன்படுத்தி வந்த சாலை குடியிருந்த வீடுகள் வரை அளவீடு செய்துள்ளனர், அத்தகைய சாலை மற்றும் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் எனக் கூறி இடித்து அகற்ற நேரிடும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திரைப்பட இயக்குனரும் விசிக கட்சி நிர்வாகியுமான கோபி நயினார் உடன் வந்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர், அப்போது அரசு அதிகாரிகள் மக்களின் பக்கம் இல்லாமல் தனிநபர் பக்கம் இருப்பதாக கூறி மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனுவை பெற்ற அதிகாரியிடம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வாக்குவாதம் செய்தார், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோபி நயினார் மக்கள் ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள் நிலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற நேரிட்டால் மக்கள் செல்வதற்கு வழி இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படக்கூடும் எனவும் தனி நபரை பெற்றிருக்கும் நிலமே அரசு நிலம் தான் என்பதற்கான முறையான ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வருவாய்த்துறை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அரசு நிலத்திற்கு அரசே தனிநபருக்கு ஆதரவாக நிலத்திற்கான பட்டா வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால் அரசு அவருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனவும் பட்டியலின மக்களை மிரட்டும் தனிநபர் மீது எஸ்சி எஸ்டி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார் தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறினார். பட்டியலின மக்களுக்கு எதிராக ஒரு அரசு அதிகாரிகள் இயங்கினால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றம் நிரூபித்தால் இது சமூகநீதிக்கான அரசு எனவும் இல்லையென்றால் சாதி இந்துக்களான அரசு எனவும் அவர் விமர்சனம் செய்தார். திமுக அரசு என்ன கொள்கை பேசுதோ அதுதான் நிர்வாகத்திலும் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசு சனா தர்மம் பார்ப்பனையும் பாஜகவை எதிர்ப்பது சரி என்றால் பிஜேபி நோக்கம் சனாதர்மம் தவிர இந்த நாட்டை யாரும் ஆளக்கூடாது என நோக்கம் இருக்கும்போது. சனாதர்மம் எதிராக ஒரு அமைப்பு உருவாகுமனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் தானே என கேள்வி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அமைப்பு இங்கு உருவாக வேண்டுமல்லவா என வினா எழுப்பினார். ஆனால் அந்த அமைப்பு அரசு ஆன பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் அடிப்படை உரிமைகள் பற்றி கவலைப்பட மாட்டோம் எங்களுக்கு நீதிமன்றம் தான் சொல்வது தான் முக்கியம் என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார், நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏற்றுக் கொள்ளும் அரசு திருப்பரங்குன்றம் விவகாரம் தீர்ப்பு சரிதானா என கேள்வி எழுப்பினார் ஆட்சிக்கு பிரச்சனை என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனா தர்மம் பற்றி பேசும் அரசு பட்டியிலின மக்களுக்கு பிரச்சனை என்றால் சனா தர்மத்தை பற்றி கவலைப்பட மாட்டேன் என்றால் யார் இங்கு சனதர்மவாதி என்ற கேள்வி எழுப்பினார்.. திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடுவோம் என கூறும் அரசு சத்தியவாணி முத்து காலத்தில் இருந்து பட்டியிலின மக்கள் உரிமைக்காக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை தன்னளவில் தான் பட்டியிலின மக்கள் முன்னேறி உள்ளம் ஒழிய ஒரு சமூக அமைப்பு முன்னேற்றீ வைத்தது என்பதை கூற சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பட்டியலின மக்கள் மீது அக்கறை உள்ளது ஆனால் திராவிட கட்சிகளுக்கு அந்தப் பங்கு கிடையாது என்றார் திராவிட இயக்கத்தால் பட்டியலின மக்கள் முன்னேறி இருக்கிறார்கள் என சொன்னால் திராவிட கட்சியின் திட்டங்கள் இருக்கலாம் அதற்குள் ஒரு ஊழல் இருக்கலாம் தேர்தல் அஜெண்டாவாக இருக்கலாம் ஒருபோதும் சமூகநீதி அடிப்படையில் உருவாகியுள்ள திட்டங்களால் பட்டியலின மக்கள் முன்னேறவில்லை எனவும், கால காலமாக பட்டியலின மக்களின் வாக்குகளை மற்றும் பெற்று ஆட்சி அதிகாரத்தில் திராவிட கட்சிகள் மற்றும் அனைத்து கட்சிகளும் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்


















