இயற்கையை பாதுகாக்கும் அரணாக பறவைகள் விளங்குகின்றது. உணவுக்காகவும் இனப்பெருக்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்கிறது. இயற்கை வளம் அதிகம் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சர்வதேச அளவில் நாடுகளிலிருந்து பறவைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிக அளவில் வருகின்றன. சர்வதேச அளவில் இடம் பெயரும் வலசை பறவைகள் கணக்கெடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் புலம்பெயரும் பறவைகள் கணக்கெடுப்பு சங்கம் சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புலம் பெயரும் பறவைகள் கணக்கெடுப்பு பணி, மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமையில் இன்று தொடங்கியது. கணக்கெடுப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்றைய கணக்கெடுப்பின் போது சுமார் 350 க்கும் மேற்பட்ட புலம் பெயரும் பறவைகள் கணக்கெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டன.


















