பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம்: உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பூம்புகார் தொகுதி வேட்பாளர் நிவேதா எம். முருகன் தேமுதிக கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி
வேட்பாளர் நிவேதா எம். முருகன் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட
கஞ்சாநகரம், மேலையூர், கருவாழைக்கரை நடுக்கரை கீழையூர், மூடிகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் சால்வ் அணிவித்து ஆரத்தி எடுத்து வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர் வாக்கு சேகரிப்பின் போது தேமுதிக கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் பண்ணை பாலு தலைவர் கே எஸ் கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் ராஜா உட்பட தேமுதிகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர் மேலும், திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன் செயற்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன் ,மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் ,தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
