விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் அறிக்கையில் சிறு,குறு விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது ஆட்சி அமைத்த பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதல்வர் ஜோசப் விஜய் சிறுகுறு விவசாயிகளுக்கு 50 ரூபாய் வரை பெற்ற அனைத்து விவசாயிகளுக்கு மட்டும் முழுமையாக தள்ளுபடி என அறிவிப்பு வெளியிட்டது இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில் உர விலையை உயர்த்தியதை கண்டித்து விவசாயிகள் நாமம் மிட்டும் வாயில் கருப்பு துணியை கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து இடத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஒரு விவசாயி தரையில் படுத்தும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பேட்டி தம்புசாமி. மாவட்ட தலைவர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்)
