விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்சனையில், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த மடிப்பிச்சை எடுத்து நூதன போராட்டம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்சனையில், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், நெற்றியில் பட்டை நாமமிட்டு கையில் துண்டு ஏந்தி மடிப் பிச்சை எடுத்து நூதன போராட்டம் :-

தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் அறிக்கையில், ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது ஆனால், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக நேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்ததில், குரு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் முழுவதும் தள்ளுபடி, இரண்டரை ஏக்கருக்கு மேல் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு 50 ஆயிரத்தில் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, ஒரு லட்சத்திற்கு மேல் கடன் வைத்துள்ள விவசாயிகளுக்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி என்று அறிவிப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளை ஏமாற்றி உள்ளதாக விவசாயிகள் விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், விவசாயிகளுக்கு ஜோசப் விஜய் அரசு பட்டை நாமம் சாற்று விட்டதாக தெரிவித்து, நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு கையில் துண்டு ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் மடி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோசப் விஜய் அண்ணாச்சி கூட்டுறவு கடன் தள்ளுபடி என்ன ஆச்சு என்ற கண்டன கோஷத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Exit mobile version