மயிலாடுதுறை மவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மங்கைநல்லூர் அஞ்சலகத்தில் இருந்து விவசாயிகள் பதிவு தபால் அனுப்பினர். அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் மங்கைநல்லூர் அஞ்சலகத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு பதிவு தபால், சாதாரண தபால் மூலமும் மற்றும் மின்னஞ்சல் மூலமும் கோரிக்கு மனு அனுப்பினர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.16, 17, 18 தேதிகளில் பெய்த கனமழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. இதுசம்பந்தமாக அனைத்து அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்து ரூ.62 கோடி விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத்துறையும் இணைந்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் தொகை வழங்கப்படாமல் கால தாமதமானதால் வேளாண்மைத் துறை செயலர் மற்றும் வேளாண்மைத்துறை இயக்குநர் ஆகியோரிடம் நேரில் மனு அளித்தோம். மயிலாடுதுறை அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக சாலை மறியல் போராட்டமும், மாவட்ட ஆட்சயரகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகம் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாக தொகையை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் கலைந்து சென்றோம். இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இது குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, உடனடியாக கோரிக்கை.
