திருவாரூர் மாவட்டத்தில் 1.லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியை விவசாய பணிகளை மேற்கொண்டார் . தற்போது அவ்வபோது பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது . இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர் . இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகளில் புகையான் நோய் தாக்குதலால் மிகுந்த பொருளாதார இழப்பிற்கு விவசாயிகள் இருந்து வருகின்றனர் . இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் புகையான் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இதுவரையிலும் வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை . பயிர் காப்பீடு என்கிற பெயரில் முறைகேடு என்கிற பெயரில் தனியார் நிறுவனம் முறைகேடு செய்கிறது . பயிர் காப்பீடு என்கிற பெயரில் எங்களை கேவலபடுத்த வேண்டாம் . அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் . வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர் .
