விழுப்புரத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரசிகர்கள் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் ரஜனி ரசிகர்கள் மாவட்ட தலைவர் ரஜனி இப்ராஹிம் தலைமையில் இன்று ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். பின்னர் பொங்கல், கேசரி உள்ளிட்ட நிவேத்யங்கள் அர்ச்சனைக்குப் பிறகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயராமன், கலைநேசன், சதீஷ் பாபு, ஏழுமலை, ஷேக், பாலகணேசன், முருகன், உள்ளிட்ட பலரான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்
















