மயிலாடுதுறையில் கண் சிகிச்சை முகாம் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் நாராயணன் ஜூவல்லரி மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அன்றைய தினமே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர் அவர்களுக்கு தேவையான மருந்து உணவு தங்கும் வசதி போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது
இந்த முகாமில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
