மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட தலைவர் தாக்கியதாக கூறி முன்னாள் நிர்வாகி மருத்துவமனையில் அனுமதி , தேசிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விரக்தியில் தன்னை தாக்கி விட்டதாக கூறுவதாக பாஜக மாவட்ட தலைவர் விளக்கம் :-
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியில் 30 வருடங்களாக உறுப்பினராக இருந்து வரும் நிலையில் சிறுபான்மையினர் அணி மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளார். இதனிடையே தமக்கு மாவட்ட பொறுப்பு வழங்கும் படி மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலுவிடம் கேட்டபோது கொச்சை வார்த்தைகளால் (பறை நாய்க்கு பொறுப்பு கேட்கிறதா) இன்று திட்டி தாக்கியதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமூகத்தின் பெயரை சொல்லி தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு மற்றும் நிர்வாகிகள் சேதுராமன் , வாஞ்சிநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இன்பராஜ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்பராஜ் கூறும்போது கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் அதிகாரம் மாவட்ட தலைவருக்கு கிடையாது.மாநில பொறுப்பாளர்களுக்கு மட்டுமே உள்ளது. ஜாதியின் அடிப்படையில் அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்குகிறார்.
இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலுவிடம் விளக்கம் கேட்டபோது பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த இன்பராஜ் முகநூலில் தேசிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பியதாகவும் , இதனை அடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியதாகவும் கூறினார். இதனை அறிந்த இன்பராஜ் தன்னை சந்திக்க வந்துவிட்டு மீண்டும் பேசாமல் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
