விழுப்புரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும் அதனை பறிக்கும் வகையில் வேட்பாளரை நிறுத்த சிவி சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டி சிவி சன்முகத்திற்கு எதிராக விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி சிவி சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக நகர செயலாளராக பசுபதி இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் கோலியனூரை சார்ந்த சுரேஷ் பாபு என்பவர் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருகிறார். விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் சுரேஷ் போட்டியிடுவது உறுதி ஆகி உள்ளதால் அதற்கு அக்கட்சியின் நகர செயலாளராக உள்ள பசுபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தனது ஆதரவாளர்களுடன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்திய பசுபதி அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் மயிலம் தொகுதியில் சிவி சண்முகம் போட்டியிடுவதால் அதில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நினைத்து செயல்படுவதால் விழுப்புரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும் அதனை பறிக்கும் வகையில் வேட்பாளரை நிறுத்த சிவி சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டி சிவி சன்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மேலும் இதனால் விழுப்புரம் மாவட்ட அதிமுக கழக செயலாளராக உள்ள சிவி சண்முகத்திடம் இருந்து மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அதிமுக
பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் தெரிவிக்க போவதாக அதிமுகவின் விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி தெரிவித்துள்ளார்.மேலும்
விழுப்புரம் தொகுதி கட்சியின் நிர்வாகிகளுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் கட்சியினர் சுப நிகழ்ச்சிக்கு அதிகளவில் செலவு செய்து வரவேற்பு பேனர்கள் வைத்தும் அழைத்தாலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் சிவி சண்முகம் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்
