திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.
இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தனிக்கும் வகையில் தினந்தோறும் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களின் திருவுருவமும் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இத்தலத்தில் இருந்தே புறப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கிறது.
பழங்கால சித்தர்களில் ஒருவரான வான்மிக சித்தருக்கு எட்டுக்குடி முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார் பொதுவாகவே முருகனின் காட்சியானது ஏதோ ஒருவித இனம் புரியா உணர்வை ஏற்படுத்தும். முருகன் காட்சி தரும் அழகு அனைவரலாறும் விரும்பத்தக்க ஒன்று. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் முருகனின் மீது அலாவதியான அன்பிருக்கும்.

இத்தல முருகப் பெருமான் தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி அருள்கிறார். நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் சரவண பவ என்று உச்சரித்தவாறு இருந்த அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கினான்.
அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன் ஒருவன் அச்சிற்பி வடித்த சிலையில் சொக்கி போனான். இது போன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்க கூடாது என்கிற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தனது விட முயற்சியால் மற்றொரு அற்புதமான முருகன் சிலையை வடித்தான்.
தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்க தொடங்கியது. அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது.
காலப்போக்கில் இந்த ஊரின் பெயரும் எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என மாறிவிட்டது.

அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில் சிறப்புகள் இந்த எட்டுக்குடி முருகன் கோயில் சிறப்பு என்னவென்றால் பார்க்கும் விதத்திற்கேற்ப முருகனின் விக்ரகம் நமக்கு காட்சி தருவதாகும். குழந்தையாக பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக பார்த்தால் இளைஞன் போலவும், முதியவராக பார்த்தால் முதியவர் தோற்றத்திலும் முருகன் காட்சியளிக்கிறார்.
எட்டுக்குடி முருகரை தரிசித்து அவருக்கு மலர் மாலைச் சூடி வேண்டினால் வறுமை நீங்கும். முருகனின் திருவுருவத்தில் சந்தனம் பூசி வழிபட்டால் உடல் நலம் பெருகும். குடும்பத்தில் பிரச்சனை நிலவுபவர்கள் இத்தல முருகனுக்கு புது வஸ்திரம் வழங்கி வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான நிகழ்வுகள் அரங்கேறும்
என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது.
இத்தலத்திற்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால் எட்டுக்குடி முருகன் திருவுருவத்தில் இருந்து வெளியேறும் இரத்தமே. கட்டை விரல் வெட்டப்பட்ட சிற்பி அடுத்த முருகன் சிலையை வடிவமைக்க உயிர் ஓட்டமிக்க கல்லை தேர்வு செய்தார். அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார்.
அப்போது இக்கிராமத்தை ஆண்டுவந்த முத்தரசன் என்ற குறுநில மன்னன் அச்சிலையைப் பார்வையிட்டார். முருகனே நேரில் நிர்ப்பது போல தோற்றம் கொண்ட அந்த முருகன் சிலைக்கு அங்கேயே கோவிலைக் கட்டினார். இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோவிலில் இன்றும் உள்ளது. தற்போதும், அச்சிலையில் இருந்து இரத்தம் வெளியேறுவதாக நம்பப்படுகிறது.

சூரபத்மன் எனும் அரக்கனை வதம் புரிய தோன்றியவர் தான் முருகபெருமான். அந்த முருகனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வழிபடுகின்றனர்.
கோயில் பிரகாரத்தில் முருகனின் நவ தளபதிகளுக்கும் சிலைகள் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ஐய்யப்பன், மகாலட்சுமி, சௌந்தரராஜ பெருமாள், நவகிரகங்கள் ஆகியோருக்கும் சிலைகள் இருக்கின்றன. சித்ராபௌர்ணமி தினத்தன்று இங்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் சஷ்டி விரதத்தையும், கவுரி விரதத்தையும் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளி அன்று கடைபிடிக்கப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இது என கூறப்படுகிறது. இக்கோயிலில் சத்ரு சம்ஹார சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
சத்ருக்களால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்க இந்த பூஜையை இங்கு செய்தால் சத்ரு தொல்லை நீங்கி நமக்கு நன்மை ஏற்படும் என்றும், மாறாக எதிரிகள் அழிய வேண்டும் என்கிற எண்ணத்தில் நாம் இத்தகைய பூஜையை இங்கு செய்தால் நமக்கு தீமைகள் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.
இங்கு முருகன் அம்பாறையிலிருந்து அம்பு எடுக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் இந்த முருகனை தரிசிப்பதாலும், அந்த முருகனின் வரலாறை குழந்தைகளுக்கு சொல்வதாலும் அவர்கள் பயம் நீங்கி படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் தைப்பூச வழிபாடு சிறப்பு பெற்ற ஒன்றாகும். தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமான் பரிசட்டத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து, அஸ்திரத் தேவருக்கு சரவணப்பொய்கையில் சிறப்பு வழிபாடுகள், தீர்த்தவாரி நடைபெற்றது. பட்டு வஸ்திரம் சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவரான முருகப் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் விபூதிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தைபூசத்தை முன்னிட்டு காலை முதலே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.