திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா வினை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கிவைத்து பொது மக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியம் திருப்பாச்சூரில் திராவிட பொங்கல் ஒன்றிய பொருப்பாளர் மோதிலால் தலைமையில் நடைபெற்றது.இந்த பொங்கல் விழாவில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடி பொது மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு 3 ஆயிரத்தையும் கரும்பையும், இனிப்புகளையும் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையையும் அவர் திறந்து வைத்தார்.இந்த விழாவில் பொதுக்குழு உறுப்பினர் ஃசிட்டிபாபு,கவுன்சிலர் மஞ்சுலிங்கேஷ்,ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும்,ஏறாளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

















