கிராமப்புற மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பள்ளி ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி வயது 51 கைது பெற்றோர்கள் பள்ளியின் முன் முற்றுகை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கேசம்பட்டியில் உள்ள கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவிகள் இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரகசிய தகவல் அடிப்படையில் இன்று பணிக்கு வந்த ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமியை கைது செய்து, திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் வந்து பள்ளி வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன் முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.