பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 5 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டி.என்.சி.எஸ்.சி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு டி.என்.சி.எஸ்.சி ஊழியர்கள் குரல் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். போராட்டத்தில் பருவகால ஊழியர்களை நிரந்தர படுத்த கோரியும், வழக்குகளை காரணம் காட்டி தாமதபடுத்த கூடாது என்றும், 12/3 முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூடாது என்றும், புதிய ஒப்பந்தம் போட கூடாது என்கிற கோரிக்கை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் 100 – க்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்

















