சீர்காழி அருகே ஐந்து தலைமுறையாக வாழ்ந்து வரும் வள்ளுவத்தெருவிற்கு சாலை வசதி அமைத்து தராததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூர் ஊராட்சியை சேர்ந்த வள்ளுவர் தெரு உள்ளது.இங்கு ஐந்து தலைமுறையாக பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.வள்ளுவத் தெருவிற்கு முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் வயல் மற்றும் வாய்க்கால் கரைகளிலேயே சென்று வருகின்றனர்.கோடை காலங்களில் இந்த வழியை பயன்படுத்தினாலும் மழை காலங்களில் தண்ணீரில் நனைந்த படியே செல்ல வேண்டி உள்ளது.மேலும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இரண்டு ஆடைகளுடனே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.இரவு நேரங்களில் மருத்துவமணைக்கு சொல்ல வேண்டு மென்றால் இந்த பகுதிக்கு ஆட்டோவும் வருவதில்லை.சாலை இல்லாததால் 108 வாகனம் உள்ளே வருவதே இல்லை.இது குறித்து ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.தேர்தல் வரும் காலங்களில் அரசியல் கட்சியினர் உங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தருவதாக கூறி வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.ஆனால் வெற்றி பெற்ற பிறகு இந்த பக்கமே வருவதில்லை னவே எங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தந்தால் மட்டுமே 2026 தேர்தலில் வாக்களிப்போம்.மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை அரசு அலடாசியப்படுத்துவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.மேலும் தெருக்களிலும் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி தெரு முனையில் தேர்தலை புறக்கணிக்கிறோம் என பேனர் வைத்துள்ளனர்.
















