12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணல்மேடு அருகே சித்தமல்லி பெரிய தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது 64) என்பவர் கடந்த 2-ந் தேதி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் (44) என்பவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராமதாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமதாஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.













