மயிலாடுதுறை மாவட்டத்தில் டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை :-
இலங்கை அருகே நிலை கொண்டுள்ள டிக்வா புயல் சின்னம் காரணமாக, கடல் கடுமையான சிற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக எழும்பும் கடல் அலைகள் கரையை நோக்கி சீறி பாய்கின்றன. இந்நிலையில் எட்டடி முதல் 11 அடி வரை கடல் அலைகள் எழும்பக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளைகோவில், சந்திரபாடி சின்னங்குடி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சார்ந்த100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
















