May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல்லில் பனிப்பொழிவால் விளைச்சல் பாதித்து கிலோ ரூ.10,000-ஐத் தாண்டிய ‘மதுரை மல்லி’

by sowmiarajan
January 10, 2026
in News
A A
0
திண்டுக்கல்லில் பனிப்பொழிவால் விளைச்சல் பாதித்து கிலோ ரூ.10,000-ஐத் தாண்டிய ‘மதுரை மல்லி’
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உலகப் புகழ்பெற்ற ‘மதுரை மல்லிகை’ சாகுபடியில் முக்கிய மையமாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளில், நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூவின் விலை முதல்முறையாக கிலோ 10,000 ரூபாய் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளது. ஐ.எஸ்.ஓ (ISO) தரச்சான்று பெற்ற உயர்தர மல்லிகை விளையும் இந்தப் பகுதிகளில், உற்பத்தி சரிபாதியாகக் குறைந்ததே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து சேகரிக்கப்படும் பூக்கள் வாசனை திரவிய ஆலைகளுக்கும், சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிலக்கோட்டை மலர் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாகச் செழிப்பாகக் காணப்படும் இந்தப் பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை வேளையில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மல்லிகைச் செடிகளைப் பதம் பார்த்துள்ளது.

கடும் குளிரின் காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் அரும்பு விடாமல் கருகி வருகின்றன. இதனால், நாளொன்றுக்கு டன் கணக்கில் வந்து கொண்டிருந்த பூக்களின் வரத்து தற்போது கிலோ கணக்கில் சுருங்கியுள்ளது. சந்தைக்கு வரும் பூக்களின் அளவு மிகக் குறைவாகவும், தேவை மிக அதிகமாகவும் இருப்பதால், நிலக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தர மல்லிகை ஒரு கிலோ 10,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் கூறுகையில், “மஞ்சள் மற்றும் பனிப்பொழிவு மல்லிகை விவசாயத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது. செடிகளில் மொட்டுகள் உருவாவதே தடைபட்டுள்ளதால், அறுவடை செய்யப் பூக்கள் இல்லை. வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருந்தாலும், எங்களிடம் விற்பனை செய்யப் பூக்கள் இல்லாததால் இந்த விலை உயர்வினால் விவசாயிகளுக்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர். பனிப்பொழிவு குறைந்து சீதோஷ்ண நிலை மாறினால் மட்டுமே மல்லிகை உற்பத்தி சீராகும் என்பதால், பிப்ரவரி மாதம் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக மலர் வணிகர்கள் கணித்துள்ளனர்.

Tags: damage Maduraidindigulfrostjasmine highMalli
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கக்கன்மணிமண்டபத்தைப்புதுப்பிக்கமுதலமைச்சரிடம்கோரிக்கைவைப்பேன்வைகோஉறுதி!

Next Post

டிவி விவாதத்தில் அரங்கிற்கு வெளியே தம்பிமார்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.