தென்மேற்கு வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை தொடங்கிய மழையானது 24 மணிநேரத்தை கடந்த போதிலும் இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன் ,ராமாபுரம் , கீழநாலாநல்லூர் , அரசூர் , தரிசுவேளி, துண்டாக்கட்டளை , கூனமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2000 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வேர்கள் அழுகும் நிலை உள்ளது ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியுள்ள மழை நீர் இதுவரையிலும் வடியாத நிலையில் தற்போது மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சம்பா தாளடி நடவு நெற்பயிர்கள் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர் எனவே வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து உரிய நிவாரண வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஒரு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் செலவு செய்துள்ளதாகவும் தொடர்ந்து பெய்த கன மழையில் நெற்பயிர்கள் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த வேதனையில் பரிதவித்து வருகின்றனர்















