வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

 திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்  அருகே ஆவூர் பகுதியில் குடும்ப தகராறில் குடிபோதையில் மனைவி 

அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கணவனை வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூர்
காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி என்பவரின் மகன் பரதன் (31). இவருக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் நேற்று பரதன் மற்றும் அவரது மனைவி சுந்தரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கைகலப்பு ஏற்பட்ட நிலையில்.. குடிபோதையில் இருந்த பரதன் மனைவி சுந்தரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த சுந்தரி(26) கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரி சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் கணவனே மனைவியை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது..

Exit mobile version