Online மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஆன்-லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் மருந்து வணிகர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் போதை மருந்துகள் மற்றும் கலாவதியான மருந்துகளின் நடமாட்டம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும், முறைப்​படுத்​தப்​ப​டாத ஆன்​லைன் மருந்து விற்​பனை​யால் நோயாளி​களின் பாது​காப்​புக்குப் பெரும் அச்​சுறுத்​தல் ஏற்படும் என்பதாலும் முறை​யான சரி​பார்ப்பு இன்றி மருந்​துகள் விநியோகிக்​கப்​படு​வ​தால், ஒரே மருந்​துச் சீட்​டைப் பலமுறை பயன்​படுத்தும் அவல நிலை, ஆன்​டிப​யாடிக், போதை தரக்​கூடிய மருந்​துகள் தடை​யின்றி கிடைப்​ப​தற்கு வழி​வகுக்​கும் செயற்கை நுண்​ணறிவு மூலம் உரு​வாக்​கப்​பட்ட போலி மருந்​துச் சீட்​டு​களைப் பயன்​படுத்தி மருந்​துகள் விற்​பனை செய்​யப்​படு​வ​தால், மருந்து எதிர்ப்புத்திறன் அதி​கரிக்​கும் அபா​யம் உள்ளதாகவும், கொரோனா காலத்​தில் நடை​முறைப்​படுத்​தப்​பட்ட தற்காலிகத் தளர்​வு​களைப் பயன்​படுத்​தி, ஆன்​லைன் நிறுவனங்கள் மருந்து விதி​களை மீறி வருவதாகவும். எனவே ஆன்லைன் மருந்​தகச் செயல்​பாடு​கள் தொடர்​பான அரசாணை​களை மத்திய அரசு உடனடி​யாகத் திரும்​பப்பெற வேண்​டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும்மேற்பட்ட மருந்து வணிகர்கள் பதாகைகளை ஏந்தி ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்களை மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version