திருவாரூர் அருகே வலங்கைமான் பகுதியில் நீலத்தீ விளையாட்டு கழகம் மற்றும் ஆர்ஆர் பள்ளி இணைந்து நடத்தும் போதை விழிப்புணர்வு மற்றும் ஜங்க் ஃபுட் எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நீலத்தீ விளையாட்டு கழகம் நீடாமங்கலம் மற்றும் ஆர் ஆர் பள்ளி வலங்கைமான் இணைந்து போதை விழிப்புணர்வு மற்றும் ஜங்க் ஃபுட்டுக்கு எதிராக நீலத்தீ விளையாட்டு கழகத் தலைவர் விஜய் தலைமையில் மாரத்தான் நடைபெற்றது.
இந்த மாரத்தானில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இந்த மாரத்தானில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை விளையாட்டு வீரர்கள் போதை விழிப்புணர்காக ஓடினார்கள் மற்றும் இதில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தானின் பிரதான நோக்கமாக வலங்கைமான் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தனி தடகள ஓட்டப்பந்தய மைதானம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த மாரத்தான் விழாவில் ஆர்ஆர் பள்ளியின் தாளாளர் நாகராணி மற்றும் திருவாரூர் விளையாட்டு பயிற்சியாளர் சாந்தி சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்













