விழுப்புரத்தில் கண் தானம் குறித்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அரசுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி
மாவட்ட நிர்வாகம் மற்றும் விழுப்புரம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக விழுப்புரம் 4 முனை சந்திப்பு சாலை வரை நடைபெற்றது பேரனில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ நிபுணர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கண் தானம் செய்வதின் அவசியம் குறித்தும், “உங்களின் கண் வேறோருவர்க்கு உலகமாக அமையட்டும்” என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

















