மயிலாடுதுறையில் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திமுகவினர் பேரணியாக வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர் :-
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கேனிக்கரை பகுதியில் இருந்து திமுகவினர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் பேரணியாக பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து அண்ணாவின் திருவருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முன்னிறுத்தி உறுதி மொழியை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர். மேலும் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைக்கப்பட்ட ஒரு லட்சம் குடும்பத்தினரும் 862 பூத்களில் இன்று உறுதி மொழியை எடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


















