தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது பாஜக நிர்வாகிகளை தாக்கிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் காமராஜர் சிலை பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்: போலீசார் கைது செய்ய முற்பட்டதால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு: பரபரப்பு
தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பாஜகவைச் சேர்ந்த மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஏற்பட்ட விவாதம் வாக்குவாதமாக மாறியது. இதனால் பாஜக மாநில இளைஞரணி தலைவரை திமுக ரவுடி கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் காமராஜர் சிலை பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் சென்னை திருப்பதி நெடுஞ்சாலை காமராஜர் சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அப்போது திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தகவல் எந்த சம்பவ இடத்துக்கு வந்த டவுன் போலீசார் அனுமதியின்றி சாலை மறியல் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினரை கைது செய்ய முற்பட்டனர். இதனால் போலீசருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதமும் அதனைத் தொடர்ந்து தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்வதிலேயே காவல்துறை கவனம் செலுத்தி வலுக்கட்டாயமாக பாஜகவினரை தரதரவென இழுத்து சென்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதியான காமராஜர் சிலை அருகே பரபரப்பாக காணப்பட்டது.

















