கண்ணுக்கட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை – திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் திராவிட நாயகன் 2.0 நல்லாட்சி மலரும் என நனிலத்தில் வேடபுமனு தாக்கல் செய்த பின்பு எஸ் டி பி ஐ கட்சி மாநில தலைவர் முஹம்மது முபாரக் பேட்டி..
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் முஹம்மது முபாரக் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நன்னிலம் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேரணியாக சென்று நன்னிலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து முகமது முபாரக் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது..
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். மீண்டும் திராவிட நாயகன் தலைமையிலான 2.0 நல்லாட்சி மீண்டும் மலரும். தமிழக முதல்வராக மாண்புமிகு முதல்வர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார். நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள். வரலாறு காணாத வெற்றியை நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் பெறும். எங்கு சென்றாலும் நன்னிலம் தொகுதி மக்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற நன்னிலம் சட்டமன்ற தொகுதியை தமிழ்நாட்டிலேயே முதன்மையான சட்டமன்ற தொகுதியாக மாற்றுவேன் என உறுதி அளித்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்கிற அளவுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற உள்ளோம் என உறுதி பட தெரிவித்தார்.
பேட்டி : முகமது முபாரக் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்.
