திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என்றும், பல்வேறு அறிவிப்புகள் வெறும் விளம்பரத்திற்காகவே வெளியிடப்பட்டதாகவும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 256 திட்டங்களை அரசு கைவிட முடிவு செய்ததாக வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டிய அவர், “ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு மக்கள் நலனுக்காக விடாமுயற்சி எடுத்ததாக எதுவும் இல்லை. வெறும் நாடகங்களும் விளம்பரங்களுமே நடந்தன” என்றார்.
மேலும், “முதல்வர் ஸ்டாலின் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார். ஆனால், சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கான சான்று, இப்போது கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகளே. நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்த ஒரே செயல், ஊர் ஊராக கருணாநிதி சிலைகள் அமைத்ததே” என்று அவர் கடுமையாக தாக்கி கூறினார்.