விழுப்புரம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மருத்துவர் இரா. இலட்சுமணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. இலட்சுமணன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை கழகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள திமுக அலுவலகம் மற்றும் சிக்னல் அருகே சந்திப்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு நகர செயலாளர் சக்கரை மற்றும் வெற்றி இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில. மகாராணி சார்பில் தீப ஒளி 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
